/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆசிரியர் சங்க பொதுக்குழு கூட்டம்
/
ஆசிரியர் சங்க பொதுக்குழு கூட்டம்
ADDED : செப் 01, 2024 04:47 AM

சங்கராபுரம், : சங்கராபுரத்தில் ஆசிரியர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
சங்கராபுரம் வட்ட தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் டி.எம்., பள்ளி வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு, வட்டார தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார். செயலாளர் பாலு வரவேற்றார். ஓய்வு பெற்ற மாவட்ட செயலாளர் தண்டபாணி, பொருளாளர் ராஜாராம் ஆகியோர் சங்க வளர்ச்சி, செயல்பாடு குறித்து பேசினர்.
கூட்டத்தில் வரும் 10ம் தேதி டிட்டோ ஜாக் சார்பில் நடக்கும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஆசிரியர்கள் திரளாக பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ரமேஷ், ஷாஜகான். குபேந்திரன், உஷாராணி, வேளாங்கண்ணி, செல்வி, தமிழரசி, யாசின் உட்பட பலர் பங்கேற்றனர்.
வட்ட பொருளாளர் தேவேந்திரன் நன்றி கூறினார்.