/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் வீடுகளுக்கு சென்று கலெக்டர் ஆறுதல்

ADDED : ஜூன் 24, 2024 05:40 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் வீடுகளுக்கு கலெக்டர் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
கள்ளக்குறிச்சி, கருணா புரம் பகுதியில் கள்ளச்சராயம் குடித்த 57 பேர் இறந்தனர்.
மேலும் பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மாடூர் மற்றும் வீரசோழபுரம் கிராமங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை கலெக்டர் பிரசாந்த் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள், படிப்பு, தொழில், வீடு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
அவர்களின் குழந்தைகளுக்கு அரசின் உத்தரவின்படி நிரந்தர வைப்புத் தொகை வழங்கிட, கணக்கெடுப்பு பணி நடப்பதாக தெரிவித்தார்.
பி.டி.ஓ.,க்கள் செல்வகணேஷ், ரங்கராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.