/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளச்சாராய பலி 64 ஆக உயர்வு குணமடைந்த 31 பேர் டிஸ்சார்ஜ்
/
கள்ளச்சாராய பலி 64 ஆக உயர்வு குணமடைந்த 31 பேர் டிஸ்சார்ஜ்
கள்ளச்சாராய பலி 64 ஆக உயர்வு குணமடைந்த 31 பேர் டிஸ்சார்ஜ்
கள்ளச்சாராய பலி 64 ஆக உயர்வு குணமடைந்த 31 பேர் டிஸ்சார்ஜ்
ADDED : ஜூன் 28, 2024 02:51 AM

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் கடந்த 18ம் தேதி விற்கப்பட்ட கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 229 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களில் நேற்று முன்தினம் வரை கள்ளக்குறிச்சியில் 32 பேர், சேலத்தில் 22 பேர், புதுச்சேரியில் 6 பேர், விழுப்புரத்தில் 4 பேர் என மொத்தம் 63 பேர் இறந்தனர். குணமடைந்த 87 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் கருணாபுரத்தை சேர்ந்த மகேஷ்,40; நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால், இறந்தோர் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 30 பேரும், சேலத்தில் ஒருவரும் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை மொத்தம் 118 பேர் குணமடைந்துள்ளனர்.
முன்னதாக அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, தேவையான மருந்து மாத்திரைகள் மற்றும் இனி சாராயம் குடிக்க மாட்டேன் என உறுதிமொழி எடுக்க வைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அப்போது கல்லுாரி டீன் நேரு, மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் பழமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தற்போது கள்ளக்குறிச்சியில் 17 பேர், புதுச்சேரியில் 8 பேர், சேலத்தில் 9 பேர், விழுப்புரத்தில் 2 பேர் என மொத்தம் 36 பேர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.