/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார்: கலெக்டர்
/
புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார்: கலெக்டர்
புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார்: கலெக்டர்
புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார்: கலெக்டர்
ADDED : டிச 01, 2024 05:34 AM
கள்ளக்குறிச்சி:' கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 'பெஞ்சல்' புயல் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களைப் பாதுகாத்திட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேவையான முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார் நகராட்சிகளில் தளவாட பொருட்கள், பணியாளர்களுடன் மீட்பு பணிகள் தயார் நிலையில் உள்ளது. இதேபோன்று பேரூராட்சிகள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை, பொதுப்பணி, வருவாய்த்துறை அதிகாரிகள் புயல் பாதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் அனைத்து வி.ஏ.ஓ.,க்கள், கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் தொடர்புடைய கிராமங்களில் தங்கி பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனமழை பெய்யும் பட்சத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி முன்னதாகவே நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும்.
பழுதடைந்த பாதுகாப்பு அற்ற நிலையில் உள்ள கட்டடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

