/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திசை மாறும் இளைஞர்களுக்கு அணை போடும் தி.மு.க.,
/
திசை மாறும் இளைஞர்களுக்கு அணை போடும் தி.மு.க.,
ADDED : செப் 17, 2024 06:16 AM
தி.மு.க.,வில் மூத்த நிர்வாகிகளுக்கு மட்டுமே தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படுவதாக கட்சியில் உள்ள இளைஞர்கள் ஆதங்கப்படுகின்றனர். அப்படியே வாய்ப்பு கொடுத்தாலும் இளைஞரணியை தாண்டி அவர்களால் எந்த பெரிய பதவியும் பெற முடிவதில்லை.
இதனால் கட்சியின் அடிமட்ட பணிகளை செய்வதற்கும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் சேர்ப்பதற்கு மட்டுமே தங்களை பயன்படுத்திக் கொள்வதாக அக்கட்சி இளைஞர்கள் வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
இதன் எதிரொலியாக இளைஞர்கள் பலர் மாற்றுக் கட்சியில் இணைந்து முக்கிய நிர்வாகிகள் பதவியில் அமருகின்றனர்.
இந்நிலையில், ஆளும்கட்சியில் பதவி இல்லாமல் அதிருப்தியில் உள்ள இளைஞர்கள், நடிகர் விஜர் துவங்கியுள்ள கட்சிக்கு அணி மாறத் துவங்கியுள்ளனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் துவக்கி உள்ள த. வெ.க., வின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதன் தாக்கம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் எதிரொலிக்கும் என்று தெரிகிறது.
இதன் காரணமாக அவர்களை வெளியே விடாமல் தடுத்து அணை போட வருமானம் தரும் முக்கிய பொறுப்புகளை வழங்கிட தி.மு.க., 'ஸ்கெட்ச்' போட்டு வருகிறது.
ஆனாலும் அதையும் மீறி இளைஞர்கள் பலர் விஜய் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டு மாநாட்டில் கலந்து கொள்ள தயாராகி வருகின்றனர்.
இது தி.மு.க., முக்கிய நிர்வாகிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
-நமது நிருபர்-