/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
காவல் நிலையத்தில் தப்பியவர் கைது
/
காவல் நிலையத்தில் தப்பியவர் கைது
ADDED : ஜூலை 04, 2024 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை, : உளுந்துார்பேட்டை, பாளையப்பட்டு தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 46; இவரை தாக்கி பணம், நகை, கொள்ளை அடிக்கப்பட்டது தொடர்பான புகாரின் பேரில், பாண்டூர் மணிகண்டன், 38; என்பவரை நேற்று முன்தினம் உளுந்துார்பேட்டை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர், அங்கிருந்து தப்பியோடினார்.
போலீசாரின் தேடுதல் வேட்டையில் பாண்டூர் காப்புக்காடு அருகே பதுங்கி இருந்த மணிகண்டனை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர்.