நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம் : தியாகதுருகம் அடுத்த பிரதிவிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த குப்பன் மகன் மணிகண்டன், 30; விவசாயி.
இவர் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு அவ்வூரில் உள்ள பெரிய ஏரியில் மீன் பிடிக்க சென்றார். அப்போது வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கி மூச்சுத்திணறி இறந்துள்ளார்.
இரவு அவர் வீட்டுக்கு வராத நிலையில் நேற்று காலை 8:30 மணிக்கு ஏரிக்கு சென்று பார்த்தபோது நீரில் இறந்து கிடந்தார். புகாரின் படி தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

