/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மினி சரக்கு லாரியை திருடியவர் கைது
/
மினி சரக்கு லாரியை திருடியவர் கைது
ADDED : மே 10, 2024 09:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் மினி சரக்கு லாரியை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம் விஜயபுரத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் ரமேஷ், 37; காய்கறி சில்லரை வியாபாரி. இவர் கடந்த 6ம் தேதி தனது மினி சரக்கு வேனை வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்தார். அன்று இரவு இரவு 7:00 மணியளவில் பார்த்த போது லாரியைக் காணவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து காண்காணிப்பு கேமரா காட்சியைக் கொண்டு விசாரித்தனர். அதில், லாரியை திருடிச் சென்ற கூகையூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 49; என்பவரை நேற்று கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.