/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் சார்பதிவாளர் அலுவலக புதிய கட்டடம்

ADDED : ஜூலை 02, 2024 06:22 AM

சங்கராபுரத்தில் ரூ. 2 கோடியில் புதிதாக கட்டப்பட்ட சார்பதிவாளர் அலுவலக கட்டடம் திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பஸ் நிலையம் அருகில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது.
சுற்றி உள்ள 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பத்திர பதிவுக்காக தினசரி சங்கராபுரம் சார்பதிவாளர் அலுவலகம் வருகின்றனர்.
நுாற்றாண்டு பழமையான இந்த கட்டடம் போதிய இடவசதி இல்லாமலும், பழுதமடைந்த நிலையில் இருந்துவந்தது. கடந்த ஆண்டு சார்பதிவாளர் அலுவலக கட்டடம் கட்ட தமிழக அரசு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது.
இதையொட்டி சார்பதிவாளர் அலுவலக புதிய கட்டட கட்டுமான பணிகள் துவங்கி தற்போது அனைத்து பணிகளும் முடிந்து திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது.