/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குடும்பத்தினர் விட்டு சென்றதாக சமூக வலைதளத்தில் பரவிய மூதாட்டி தானாகவே வீட்டிற்கு வந்தார்
/
குடும்பத்தினர் விட்டு சென்றதாக சமூக வலைதளத்தில் பரவிய மூதாட்டி தானாகவே வீட்டிற்கு வந்தார்
குடும்பத்தினர் விட்டு சென்றதாக சமூக வலைதளத்தில் பரவிய மூதாட்டி தானாகவே வீட்டிற்கு வந்தார்
குடும்பத்தினர் விட்டு சென்றதாக சமூக வலைதளத்தில் பரவிய மூதாட்டி தானாகவே வீட்டிற்கு வந்தார்
ADDED : மே 01, 2024 11:45 PM

கள்ளக்குறிச்சி, : ஒன்றரை கோடி சொத்தள்ள மூதாட்டி ஒருவரை குடும்பத்தினர் அம்போவேன விட்டு சென்றதாக சமூக வலைதளத்தில் பரவிய நிலையில், நேற்று தானாகவே வீட்டிற்கு வந்தடைந்தார். வீடியோ எடுத்து தவறாக செய்தி பரப்பி விட்டதாக குடும்பத்தினர் வேதனையடைந்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் நேற்று முன்தினம் மூதாட்டி ஒருவர் ஆதரவற்ற நிலையில் படுத்து கிடந்துள்ளார். இதனைக் கண்ட சிலர், வீடியோ எடுத்து மூதாட்டியிடம் விசாரித்தபோது தனது பேரன் விட்டு சென்றதாக தடுமாற்றத்துடன் கூறியுள்ளார்.
தொடர்ந்து வீடியோ எடுத்தவர்கள் மூதாட்டியை, அவரது குடும்பத்தினரே அம்போவேன விட்டு சென்றதாக வாட்ஸ்-ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பினர்.
மூதாட்டி சின்னசேலம் அடுத்த நைனார்பாளையம் சேர்ந்த தங்கவேல் மனைவி சீதா,85; என்பது தெரிந்தது. இவருக்கு பாலுசாமி, முருகேசன் ஆகிய மகன்கள் உள்ளனர். தற்போது மூதாட்டியை அவரது பேரன்கள் தனசேகர், குமார் ஆகியோர் பராமரித்து வருகின்றனர். மூதாட்டி சீதா, நேற்று முன்தினம் ஆத்துார் அருகே ஆனையம்பட்டியில் உள்ள தனது மூத்த சகோதரி கொளஞ்சியம்மாள் வீட்டிற்கு சென்றபோது வழிதவறி வாழப்பாடிக்கு சென்றது தெரிந்தது.
நேற்று காலை 6 மணிக்கு திடீரென மூதாட்டி சீதா, தானாகவே நைனார்பாளைம் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். மூதாட்டியை கண்ட அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். மூதாட்டி சீதா பெயரில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாய நிலங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மூதாட்டியின் பேரன் தனசேகர் கூறுகையில்; நான் உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்கு சென்றிருந்த நேரத்தில், தனது பாட்டி வெளியே சென்று வழிதவறிவிட்டார்.
எங்களை பாதுகாத்து வளர்த்த பாட்டியை எப்படி விட்டு விடுவோம். சமூக வலைதளங்களில் தவறான தகவலை பரப்பி விட்டது கவலை ஏற்படுத்தியது என்றார்.

