/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஓய்வூதியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
/
ஓய்வூதியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 07, 2024 06:23 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் அய்யாமோகன் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் கேசவராமானுஜம் முன்னிலை வகித்தார். ஓய்வுபெற்ற கிராம உதவியாளர் சங்க மாநில தலைவர் ராஜூ, மாநில செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணசாமி கண்டன உரையாற்றினர்.
ஓய்வூதியர்களின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி கோஷம் எழுப்பினர்
மாவட்ட, வட்ட உறுப்பினர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.