/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விபத்து ஏற்படுத்திய பஸ்சை அடித்து நொறுக்கிய மக்கள்
/
விபத்து ஏற்படுத்திய பஸ்சை அடித்து நொறுக்கிய மக்கள்
விபத்து ஏற்படுத்திய பஸ்சை அடித்து நொறுக்கிய மக்கள்
விபத்து ஏற்படுத்திய பஸ்சை அடித்து நொறுக்கிய மக்கள்
ADDED : மார் 27, 2024 11:14 PM

தியாகதுருகம் : தியாகதுருகம் சந்தை மேடு பகுதியைச் சேர்ந்த தஸ்தகீர் மகன் சேட்டு, 38; இறைச்சி கடை வைத்துள்ளார். இவர் நேற்று காலை 9:30 மணிக்கு பஸ் நிலையம் அருகே திருக்கோவிலுார் சாலை சந்திப்பு அருகே ஹீரோ பேஷன் ப்ரோ பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த தனியார் பேருந்து பஸ் சேட்டு மீது மோதியது. படுகாயமடைந்த சேட்டு உயிருக்கு போராடியதை கண்ட அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து பஸ்சின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். பயணிகள் அலறி அடித்து இறங்கி ஓடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
தகவல் அறிந்து சென்ற போலீசார் பொது மக்களை சமாதானப்படுத்தினர்.
காயமடைந்த சேட்டு சேலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி சேட்டு இறந்தார். விபத்து குறித்து தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.