ADDED : மே 25, 2024 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே விற்பனைக்காக குட்கா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மூங்கில்பாடி கிராமத்தை சேர்ந்த பிரபாகரன், 73; என்பவரது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது.
இதனையடுத்து பிரபாகரனை கைது செய்து, கடையில் இருந்த குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

