/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மக்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் 'அட்வைஸ்'
/
மக்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் 'அட்வைஸ்'
மக்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் 'அட்வைஸ்'
மக்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் 'அட்வைஸ்'
ADDED : ஆக 24, 2024 06:51 AM

கள்ளக்குறிச்சி: பொதுமக்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்பதை உணர்ந்து பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை முதன்மை அலுவலர்களுடான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள், பணிகளின் முன்னேற்றம், நலத்திட்டங்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் மக்களுடன் முதல்வர் திட்டம், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நிலுவை மனுக்கள், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம், நீங்கள் நலமா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள், வருவாய் துறை சார்பில் நிலம் சார்ந்த நடவடிக்கை மற்றும் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்தும் பொதுமக்களின் நிலுவை மனுக்கள், ஏற்பு, தள்ளுபடி, தீர்வு குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்களை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும். பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு தாமதமின்றி தீர்வு காண வேண்டும். மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
பொதுமக்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்பதை உணர்ந்து அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் உட்பட அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் பங்கேற்றனர்.