ADDED : ஆக 27, 2024 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம் : எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் மாயமான கல்லுாரி மாணவி குறித்து கச்சிராயபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கச்சிராயபாளையம் அடுத்த எடுத்தவாய்நத்தம், புதுக்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகள் கயல்விழி, 19; , இவர் தலைவாசல் பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.சி.ஏ., முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் சாப்பிட்டு விட்டு உறங்க சென்றவர் காலையில் மாயமானார்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் பரிகம் கிராமத்தை சேர்ந்த கருணாநிதி மகன் கோகுல் என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.