/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மார்க்கெட் கமிட்டியில் விளைபொருட்கள் வரத்து குறைந்தது
/
மார்க்கெட் கமிட்டியில் விளைபொருட்கள் வரத்து குறைந்தது
மார்க்கெட் கமிட்டியில் விளைபொருட்கள் வரத்து குறைந்தது
மார்க்கெட் கமிட்டியில் விளைபொருட்கள் வரத்து குறைந்தது
ADDED : மார் 14, 2025 07:41 AM
திருக்கோவிலுார்: மழை காரணமாக அறுவடை நிறுத்தப்பட்டதால், அரகண்டநல்லூர் மார்க்கெட் கமிட்டியில் விளைபொருட்கள் வரத்து குறைந்தது.
அரகண்டநல்லூர் மார்க்கெட் கமிட்டியில் சமீபகாலமாக நெல், மக்காச்சோளம், உளுந்து உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு சராசரியாக நாள்தோறும் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வர்த்தகம் நடந்து வந்தது. கடந்த இரு தினங்களாக, திருக்கோவிலுார் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால், அறுவடை பாதிக்கப்பட்டது.
இதனால் நேற்று, 1200 மூட்டை நெல்; 100 மூட்டை உளுந்து; 100 மூட்டை கம்பு; 50 மூட்டை மக்காச்சோளம் என 119.48 மெட்ரிக் டன் விளைபொருட்கள் மட்டுமே, ஏலத்திற்கு வந்தன. இதன் மூலம் ரூ. 38 லட்சம் வர்த்தகமானது. அங்கு குறிப்பிட்ட சில தினங்களில், 2 கோடி ரூபாய்கும் அதிகமாக கூட வர்த்தகம் நடக்கும். ஆனால் கடந்த இரு தினங்களாக, பெய்த தொடர் மழையால் வரத்து குறைந்துள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.