
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, சண்முகா மகாலில் ஞானவிழா, கச்சியப்ப சிவாச்சாரியார் சுவாமிகள் குருபூஜை, 'கந்தபுராணத்தில் முருகப்பெருமானின் விரதங்கள்' நுால் வெளியீட்டு விழா, என முப்பெரும் விழா நேற்று நடந்தது. கந்தபுராண ஞானசபை சார்பில், நடந்த விழாவில் சிவப்பிரகாசம் முன்னிலை வகித்தார். சாம்பவம் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக திருக்கயிலாய பரம்பரை 29 வது பட்டம் துழாவூர் ஆதீனம் ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள் 'கந்தபுராணத்தில் முருகப்பெருமானின் விரதங்கள்' எனும் நுாலையும், மயிலாடுதுரை மகா சதாசிவம் பீடம் குரு முதல்வர் சுவாமிநாத சிவாச்சாரியார், கந்தபுராணக் கட்டுரைகள் நுாலையும் வெளியிட்டனர்.
இந்த நுால்களை, கள்ளக்குறிச்சி சுசீலா கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வக்குமரன், திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த பயிற்சி மைய அமைப்பாளர் தமிழழகன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
காஞ்சி குமரக்கோட்டம் தலைமை அர்ச்சகர் காமேஸ்வர குருக்கள், கந்த புராண ஞான சொற்பொழிவாற்றினார்.
தொடர்ந்து கந்தபுராணம் பாடலை பாடிய குழந்தைகள் மற்றும் கட்டுரையாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விழாவில் துரைசாமி, ராதா, அக்ஷரா, சிவசெந்தில்நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கந்தபுராண ஞானசபை நிறுவனர் கார்த்திகேயசிவம் நன்றி கூறினார்.