/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி பலி
/
தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி பலி
ADDED : செப் 03, 2024 11:42 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த பொரசக்குறிச்சியை சேர்ந்தவர் ரங்கசாமி மகள் மணிமேகலை,35; இவருக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன் கடலுார் மாவட்டம், தருமன்குடிகாட்டை சேர்ந்த சீனு என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த 2 மாதத்திலேயே கணவன் சீனு, மனைவியை அவரது தாய் வீட்டிலேயே விட்டு சென்றுள்ளார்.
உடல் பருமன், சர்க்கரை, ரத்த அழுத்தம் மற்றும் தோல் வியாதி உள்ளிட்ட பிரச்னைகளால் மன உளைச்சலில் இருந்த மணிமேகலை கடந்த 1ம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். மணிமேகலையின் அலறல் சத்தம் கேட்டு அவரை மீட்டு மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கும் அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு மணிமேகலை உயிரிழந்தார். வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.