ADDED : மே 10, 2024 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பெண்ணைத் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுாரைச் சேர்ந்தவர் பிரபு மனைவி கொடி பவுனு, 36; இவர் 7ம் தேதி இரவு 9:00 மணிக்கு தனது தோழி கிருஷ்ணவேணியுடன் சாலையில் நடந்து சென்றார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த சேகர் மகன் வேலுசாமி, 39; முன்விரோதம் காரணமாக கொடி பவுனுவை திட்டி, கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்த புகாரின் பேரின் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து வேலுசாமியை கைது செய்தனர்.