/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தனியார் குளிர்பான நிறுவனத்தில் திருட்டு
/
தனியார் குளிர்பான நிறுவனத்தில் திருட்டு
ADDED : மார் 03, 2025 07:09 AM
கள்ளக்குறிச்சி : நீலமங்கலத்தில் தனியார் கம்பெனி லாக்கரில் இருந்து, 60 ஆயிரம் ரூபாய் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாசாமி மகன் அசோக்குமார், 22; இவர் நீலமங்கலத்தில் உள்ள தனியார் குளிர்பான நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். குளிர்பானம் விற்பனை செய்த பணம் மற்றும் கடன் வசூல் பணத்தை எண்ணி, தினமும் இரவு லாக்கரில் வைத்து விட்டு செல்வதும், மறுநாள் காலை, அந்த பணத்தை எடுத்து வங்கியில் செலுத்துவதும் வழக்கம்.
கடந்த பிப்ரவரி 28ம் தேதி வசூலான பணம் 60 ஆயிரம் ரூபாயை லாக்கரில் வைத்து பூட்டி, சாவியை மேசையில் வைத்து சென்றார். நேற்று முன்தினம் காலையில் வந்து பார்த்த போது லாக்கரில் பணம் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்தவர், கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.