/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீட்டின் கதவை உடைத்து பணம் நகை கொள்ளை
/
வீட்டின் கதவை உடைத்து பணம் நகை கொள்ளை
ADDED : செப் 05, 2024 07:36 PM

மூங்கில்துறைப்பட்டு :வடபொன்பரப்பி கிராமத்தில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடபொன்பரப்பி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த தனகோடி,68; கடந்த 1-ம் தேதி வீட்டின் கதவை பூட்டிவிட்டு பெரம்பலுார் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். மீண்டும் நேற்று காலை வீட்டிற்கு வந்த தனகோட்டி பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் பீரோவில் உள்ள துணிகள் கலைந்த கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக வடபொன்பரப்பி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் விரைந்து சென்று கொள்ளை போன வீட்டினை பார்வையிட்டனர். திருக்கோவிலுார் டி.எஸ்.பி., பார்த்திபன், சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மோப்ப நாய் ராக்கி வரவழைத்து மோப்பமிட்டு ஓடவிட்டனர். அருகில் உள்ள விவசாய நிலத்தின் அருகே சென்று நின்று மீண்டும் திரும்பியது.
போலீசாரின் விசாரணை 10 சவரன் தங்க நகை, ரூ.15,000 ரொக்க பணம் மற்றும் அரை கிலோ வெள்ளி ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளது தெரியவந்துள்ளது. புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.