/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தியாகதுருகம் ஒன்றிய குழு கூட்டம்
/
தியாகதுருகம் ஒன்றிய குழு கூட்டம்
ADDED : செப் 05, 2024 09:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம்: தியாகதுருகம் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.
தியாகதுருகம் பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு சேர்மன் தாமோதரன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் நெடுஞ்செழியன், ஆத்மா குழு தலைவர் அண்ணாதுரை முன்னிலை வகித்தனர். துணை பி.டி.ஓ., தினகரன் பாபு வரவேற்றார். கவுன்சிலர்கள் 14 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஒன்றியத்தில் உள்ள 40 ஊராட்சிகளிலும் மழைக்காலங்களில் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது, சுற்றுப்புற சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், சுகாதாரமான குடிநீர் வழங்குதல், புதிய நலத்திட்ட பணிகளை மேற்கொள்ளுதல் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. துணை பி.டி.ஓ., தயாபரன் நன்றி கூறினார்.