/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முத்து மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
/
முத்து மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED : ஜூலை 22, 2024 11:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி முத்து மாரியம்மன் கோவிலில் ஆரியமாலா - காத்தவராயன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மந்தைவெளி முத்து மாரியம்மன் கோவிலில் ஆடி தேர் திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி நேற்று முன்தினம் காத்தவராயன் சுவாமி, ஆரியமாலா திருக்கல்யாணம் நடந்தது.
திருமலை கேசவ ஐயங்கார் குழுவினர் திருக்கல்யாண வைபவத்தை நடத்தி வைத்தனர். வரும் 24ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது.