/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுார் உயர்மட்ட பாலம் 'பளிச்'
/
திருக்கோவிலுார் உயர்மட்ட பாலம் 'பளிச்'
ADDED : பிப் 26, 2025 05:19 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலூர் புறவழிச் சாலை உயர்மட்ட பாலத்தில், ரூ. 24.6 லட்சத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.
திருக்கோவிலுார் புறவழிச்சாலையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, உயர் மட்ட பாலம் உள்ளது. இதில் அரசியல் கட்சியினர் விளம்பரங்களை எழுதி, பாலத்தை சீர் குலைத்தனர்.
இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்தின் சார்பில் ரூ. 24.6 லட்சம் மதிப்பீட்டில் அந்த பாலத்தின் தடுப்பு சுவர்கள் சுத்தம் செய்யப்பட்டு வெள்ளை அடித்து, கருப்பு வண்ணம் தீட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக உயர்மட்ட பாலம் பளிச்சிட துவங்கி உள்ளது.
பாலத்தின் தூண்களில் வண்ணம் பூச வேண்டும்; வரும் நாட்களில் அரசியல் கட்சியினர் விளம்பரம் எனும் பெயரில் அந்த பாலத்தை, பாழ்படுத்துவதை நெடுஞ்சாலைத்துறை அனுமதிக்காமல், கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

