/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாடகை செலுத்தாத கடைகளுக்கு 'சீல்'; திருக்கோவிலுார் நகராட்சி அதிரடி
/
வாடகை செலுத்தாத கடைகளுக்கு 'சீல்'; திருக்கோவிலுார் நகராட்சி அதிரடி
வாடகை செலுத்தாத கடைகளுக்கு 'சீல்'; திருக்கோவிலுார் நகராட்சி அதிரடி
வாடகை செலுத்தாத கடைகளுக்கு 'சீல்'; திருக்கோவிலுார் நகராட்சி அதிரடி
ADDED : பிப் 22, 2025 07:18 AM

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் நகராட்சி கடைகளுக்கு வாடகை செலுத்தாத கடைகளுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது.
திருக்கோவிலுார் பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான 63 கடைகள் உள்ளது. இதில் 14 கடைகள் வாடகை செலுத்தவில்லை. பாக்கித் தொகையை வசூல் செய்யும் வகையில், நகராட்சி கமிஷனர் திவ்யா தலைமையில், வருவாய் ஆய்வாளர் திருச்செல்வி, அலுவலக உதவியாளர்கள் செந்தில்குமார், சரவணன் ஆகியோர் வாடகை செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைக்க முயன்றனர்.
அப்போது, 12 கடைக்காரர்கள் வாடகையை செலுத்தினர். 2 கடைகள் வாடகை செலுத்தாத காரணத்தால் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.