sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கள்ளக்குறிச்சி நடராஜருக்கு திருவோண சிறப்பு வழிபாடு

/

கள்ளக்குறிச்சி நடராஜருக்கு திருவோண சிறப்பு வழிபாடு

கள்ளக்குறிச்சி நடராஜருக்கு திருவோண சிறப்பு வழிபாடு

கள்ளக்குறிச்சி நடராஜருக்கு திருவோண சிறப்பு வழிபாடு


ADDED : மே 02, 2024 06:41 AM

Google News

ADDED : மே 02, 2024 06:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி செம்பொற்ஜோதிநாதர் கோவிலில், நடராஜருக்கு சித்திரை திருவோண சிறப்பு வழிபாடு நடந்தது.

பொதுவாக சிவபெருமானுக்கு தினசரி 6 கால பூஜை நடப்பது வழக்கும். ஆனால் நடராஜருக்கு மட்டும் ஆண்டில் ஆறு தினங்கள் மட்டுமே அபிஷேகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. சித்திரைத் திருவோணம், ஆனி திருமஞ்சனம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை, மாசி சதுர்த்தசி ஆகிய 6 நாட்களில் மட்டுமே சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படுகிறது. அதன்படி சித்திரைத் திருவோண நாளான நேற்று கள்ளக்குறிச்சி அடுத்த சாமியார் மடம் செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் உள்ள சிவகாமி அம்மை உடனுறை நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

காலை 8:00 மணிக்கு விநாயகர் பூஜை, நால்வர் துதி, திருவாசகம், பஞ்சபுராணம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளை ஓதி வழிபாடுகள் நடந்தது. அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக்குறவர்கள் நால்வருக்கு பூஜைகள் நடத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us