ADDED : ஜூலை 14, 2024 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி, : சின்னசேலம் அடுத்த மூங்கில்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார், 42; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கணபதி மகன் செல்வம், 24; என்பவருக்கும் போக்சோ வழக்கு தொடர்பாக முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில், செல்வம் தரப்பினர் வழக்கை வாபஸ் பெறக்கோரி அசோக்குமாரை வற்புறுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு அசோக்குமார், அவரது உறவினர் மூங்கில்பாடி சுரேஷ்,36; ஆகியோரை செல்வம் தரப்பினர் கத்தியால் குத்தினர். படுகாயமடைந்த இருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து கணபதி, 47; இவரது மகன் செல்வம்,24; விஜயகுமார்,29; ஆகியோரை கைது செய்தனர். மேலும் மூவரை தேடி வருகின்றனர்.