/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுார் முன்னாள் சேர்மன் இல்ல திருமண விழா
/
திருக்கோவிலுார் முன்னாள் சேர்மன் இல்ல திருமண விழா
ADDED : மார் 25, 2024 05:54 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் முன்னாள் சேர்மன் இல்ல திருமண விழா நடந்தது.
திருக்கோவிலுாரில் முன்னாள் சேர்மன் கோவிந்தராஜ் மைத்துனர் தாஸ் - வசந்தி தம்பதி மகன் டாக்டர் பாலாஜி, புதுக்கோட்டை மீனாட்சி நகர் தலைமை ஆசிரியர் பழனிசாமி - தமிழ்ச்செல்வி மகள் டாக்டர் லட்சுமி பிரியா திருமணம் நடந்தது.
தொழிலதிபர் கணேஷ் - யமுனா, மகேஷ் - காவியா மற்றும் கிருத்திகாதாஸ் வரவேற்றனர். விழாவில், முன்னாள் அமைச்சர் மோகன், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு, எம்.எல்.ஏ., க்கள் லட்சுமணன், மணிக்கண்ணன், விசாலாட்சி பொன்முடி, டி.எஸ்.பி., மனோஜ்குமார், தாசில்தார் மாரியா பிள்ளை, ஏ.கே.டி., கல்வி நிறுவனங்களின் தலைவர் மகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் பிரபு, வெங்கடேசன், புஷ்பராஜ், ஒன்றிய குழு சேர்மன் ராஜவேல்.
திருக்கோவிலுார் நகராட்சி சேர்மன் முருகன், த.மா.கா., மாவட்ட தலைவர் தசரதன், தொழிலதிபர் முரளி, வாசிம் ராஜா, முன்னாள் பேரூராட்சி தலைவர் விநாயகமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். ராஜேஷ் காயத்ரி, டாக்டர் நிவேதிகா நன்றி கூறினர்.

