/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இன்று 11ம் வகுப்பு பொதுத் தேர்வு
/
இன்று 11ம் வகுப்பு பொதுத் தேர்வு
ADDED : மார் 05, 2025 05:22 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று நடக்கும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வில் 17 ஆயிரத்து 475 மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்கி வரும் 27ம் தேதி வரை நடக்கிறது. மாவட்டத்தில் 74 மையங்களில் நடைபெறும் தேர்வினை 17 ஆயிரத்து 475 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
இத்தேர்வு பணிகளில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் என 2000 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
சி.இ.ஓ., - மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையிலான பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் தேர்வு மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும் தேர்வு மையங்களில் மாணவர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்வையொட்டி 3 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், 2 விடைத்தாள் சேகரிப்பு மையங்களும், 2 மேல் நிலை விடைத்தாள் எடுத்துச்செல்லும் வழித்தடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.