/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பச்சிளங்குழந்தை மீட்பு போலீஸ் விசாரணை
/
பச்சிளங்குழந்தை மீட்பு போலீஸ் விசாரணை
ADDED : ஆக 11, 2024 05:38 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில், மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணால் வீசப்பட்ட பச்சிளங் குழந்தையை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே ஜூஸ் கடையின் வெளியே இருந்த மேஜை மீது நேற்று முன்தினம் காலை 9:00 மணியளவில் கிடந்த ஆண் குழந்தையை அப்பகுதி மக்கள் மீட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி போலீசார் நேரில் சென்று குழந்தையை மீட்டு, விசாரணை நடத்தினர்.
அதில் பிறந்து 18 மணி நேரமே ஆன ஆண் குழந்தையின் இடது கையில் கட்டப்பட்டிருந்த அட்டையில் தாய் பெயர், பிறந்த தேதி, எடை உள்ளிட்ட விபரங்களை வைத்து அரசு மருத்துவமனையில் குழந்தையை ஒப்படைத்து விசாரித்தனர்.
அதில், குழந்தையின் தாய் கள்ளக்குறிச்சி வ.உ.சி., நகரைச் சேர்ந்த மதினா, 35; என்பது தெரிந்தது. மேலும், கடந்த 8ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டதால் மதினா தனியாக மருத்துவமனைக்கு வந்துள்ளார். கர்ப்ப காலத்தில் எடுத்த மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் மதினாவிடம் இல்லை. அங்கு, மதினாவுக்கு சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
மதினாவின் கணவர் பஷீர் என்றும், பெங்களூருவில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.
மேலும், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த மதினா, தனக்கு குழந்தை வேண்டாம் என மருத்துவமனையில் கத்தியுள்ளார்.
அதனால், அவரே அரசு மருத்துவமனையில் 100 மீட்டர் தொலைவில் உள்ள ஜூஸ் கடையின் முன்பு குழந்தையை வைத்து விட்டு சென்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.