/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தனியார் பஸ் மோதியதில் டிராக்டர் டிரைவர் பலி
/
தனியார் பஸ் மோதியதில் டிராக்டர் டிரைவர் பலி
ADDED : ஆக 22, 2024 12:38 AM
உளுந்துார்பேட்ட : உளுந்துார்பேட்டை அருகே தனியார் டிராவல்ஸ் பஸ் டிராக்டர் மீது மோதியதில் டிரைவர் பரிதமாக இறந்தார்.
உளுந்துார்பேட்டை தாலுகா மடப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி, 55; டிரைவரான இவர், டிராக்டர் டிப்பரில் விறகுகளை ஏற்றிக் கொண்டு மடப்பட்டு கிராமத்தில் இருந்து கெடிலம் நோக்கி சென்றார். நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் செரத்தனுார் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற தனியார் டிராவல்ஸ் பஸ் டிராக்டர் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட குப்புசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த போலீசார் குப்புசாமியின் உடலை மிட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.