/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
காலாவதியான டோல்கேட்டுகளை அகற்ற வணிகர் சங்கம் வலியுறுத்தல்
/
காலாவதியான டோல்கேட்டுகளை அகற்ற வணிகர் சங்கம் வலியுறுத்தல்
காலாவதியான டோல்கேட்டுகளை அகற்ற வணிகர் சங்கம் வலியுறுத்தல்
காலாவதியான டோல்கேட்டுகளை அகற்ற வணிகர் சங்கம் வலியுறுத்தல்
ADDED : செப் 02, 2024 06:49 AM
உளுந்துார்பேட்டை: 'வியாபாரிகள் சுதந்திரமாக வணிகம் செய்ய அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையில் நேற்று நடந்த வியாபாரிகள் சங்க முப்பெரும் விழாவில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நகராட்சி, மாநகராட்சிகளில் கட்டடங்களை மறு ஆய்வு செய்து வரி உயர்த்தி பல லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என நிர்பந்திக்கின்றனர். கடைகளுக்கு சீல் கட்டாயம் என்பதை தடை செய்ய வேண்டும். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை என்பதை தவிர்த்து மாதம்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும்.
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வின்போது, பொருட்களில் நச்சு இருப்பதாக கூறுகின்றனர். வியாபாரிகள், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களைத்தான் வாங்கி விற்கின்றனர். நச்சுத் தன்மையில்லாத உரங்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதை தடுக்க வேண்டும்.
தமிழகத்தில் காலாவதியான டோல்கேட்டுகளை அப்புறப்படுத்த வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் உயர்த்துவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்.
இல்லையெனில் அனைத்து அமைப்புகளையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம். வியாபாரிகள் சுதந்திரமாக வணிகம் செய்ய அரசு ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு விக்கிரமராஜா கூறினார்.