/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் 'டிராபிக் ஜாம்'
/
தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் 'டிராபிக் ஜாம்'
தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் 'டிராபிக் ஜாம்'
தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் 'டிராபிக் ஜாம்'
ADDED : ஆக 26, 2024 05:15 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகரின் முக்கிய சாலையோரம் தாறுமாறாக நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக விளங்குகிறது. நகரின் முக்கிய சாலைகளான காந்தி ரோடு, சேலம் சாலை ஆகிய சாலைகளில் அரசு அலுவலங்கள், வங்கிகள், வணிக நிறுவனங்கள் உள்ளதால் எப்போது பார்த்தாலும் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து மிகுதியாக உள்ளது.
குறிப்பாக, கச்சேரி சாலையில் வங்கிககள் மற்றும் அரசு அலுவலகங்கள், கோர்ட் உள்ளதால் வாகன அப்பகுதியில் போக்குவரத்து அதிகமாக காணப்படும்.
இந்நிலையில், இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையை அடைத்தவாறு தங்களது வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால், இடநெருக்கடி ஏற்பட்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுதற்கு காரணமாக உள்ளது. அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகிறது.
நகரின் முக்கிய சாலைகளின் இருபுறமும் தாறுமாறாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிகளை மீறி சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தம் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை மேற் கொண்டு தீர்வு காணவேண்டும்.