/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வேன் மோதி 2 பேர் பலி சின்னசேலத்தில் சோகம்
/
வேன் மோதி 2 பேர் பலி சின்னசேலத்தில் சோகம்
ADDED : மார் 04, 2025 02:17 AM

சின்னசேலம்,: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த வி.அலம்பலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி, 24; கூலித் தொழிலாளி. சென்னையில் பணிபுரிந்து வந்தார். பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் பழனிவேல், 40; வெல்டர். இவர், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில், பெரியசாமி சென்னை செல்ல பஸ் ஏற்றுவதற்காக, சின்னசேலம் பஸ் நிலையத்திற்கு 'ஸ்பிளண்டர்' பைக்கில் அழைத்துச் சென்றார்.
குரால் பிரிவு சாலை அருகே சென்றபோது, எதிரே தருமபுரி மாவட்டம், காரியமங்கலம் அடுத்த ஹெட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ், 23, ஓட்டி வந்த பிக்கப் வேன் பழனிவேல் பைக் மீது மோதியது. பழனிவேல், பெரியசாமி சம்பவ இடத்திலேயே இறந்தனர். கீழ்க்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.