/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரம் ஊராட்சி வார்டு உறுபினர்களுக்கு பயிற்சி
/
சங்கராபுரம் ஊராட்சி வார்டு உறுபினர்களுக்கு பயிற்சி
சங்கராபுரம் ஊராட்சி வார்டு உறுபினர்களுக்கு பயிற்சி
சங்கராபுரம் ஊராட்சி வார்டு உறுபினர்களுக்கு பயிற்சி
ADDED : ஆக 08, 2024 11:27 PM

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் வார்டு உறுப்பிணர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு ஊராட்சி அளவிலான நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகள் குறித்து விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.
இதில் பயிற்றுனர்கள் தனபால், எழிலரசி, புனிதா, அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டு வளுமை இல்லாத வாழ்வாதாரம் நிறைந்த கிராம ஊராட்சி, நல வாழ்வு கொண்ட கிராம ஊராட்சி, தண்ணீரில் தன்னிறைவு உள்ளிட்டவை குறித்து விளக்கி கூறி பயிற்சி அளித்தனர்.
இந்த பயிற்சியில் 60 வார்டு உறுப்பிணர்கள் பங்கேற்றனர்.
இவர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன் குமார், செல்வபோதகர் ஆகியோர் சான்றிதழ் வழங்கினர்.