/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்
/
தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்
ADDED : ஆக 18, 2024 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை : எடைக்கல் காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
உளுந்துார்பேட்டை உட்கோட்டம் எடைக்கல் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் கிஷோர். இவர் விபத்து வாகனங்களுக்கு பணம் வாங்கிக் கொண்டு வாகனங்களை விடுவித்தது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தன. அதன் பேரில் கள்ளக்குறிச்சி எஸ்.பி. ரஜத்சதுர்வேதி விசாரணை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து தலைமை காவலர் கிஷோரை ஆயுதபடைக்கு இடம் மாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டார்.

