ADDED : ஆக 30, 2024 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: மணலுார்பேட்டை அருகே மதுபாட்டில் விற்பனை செய்த பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலுார் அடுத்த காங்கேயனுார், சடைக்கட்டி கிராமங்களில் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மணலுார்பேட்டை போலீசார், நேற்று முன்தினம் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அதில் காங்கேயனுாரில் சிவக்குமார் மனைவி விஜயா,40, வீட்டின் பின்புறமும், சடைக்கட்டி தண்டபாணி மகன் கவியரசு,39; அங்குள்ள செங்கல் சூளையின் அருகே மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிந்தது. இதனையடுத்து விஜயா, கவியரசு ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.