/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இரு பைக்குகள் மோதல்; பஸ்சில் சிக்கி 2 பேர் பலி
/
இரு பைக்குகள் மோதல்; பஸ்சில் சிக்கி 2 பேர் பலி
ADDED : மார் 10, 2025 11:31 PM
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி, பஸ் சக்கரத்தில் சிக்கியதில் இருவர் பலியாகினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த டி.புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் ஹரிகரன், 22; நேற்று இரவு, 8:30 மணிக்கு பைக்கில் திருக்கோவிலுார் நோக்கி சென்று கொண்டிருந்தார். அணைக்கட்டு சித்தாளம்மன் கோவில் அருகே, முன்னால் சென்ற அரசு டவுன் பஸ்சை முந்த முயன்றார். எதிரில், அன்றாயநல்லுாரைச் சேர்ந்த ஆறுமுகம், 45, ஆதிகேசவன், 65, வந்த பைக் மீது ஹரிஹரன் பைக் மோதியதில் இரு பைக்குகளும், டவுன் பஸ் பின்பக்க சக்கரத்தில் சிக்கின.
ஹரிகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆதிகேசவன் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ஆறுமுகம் சிகிச்சை பெற்று வருகிறார். திருக்கோவிலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.