தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பட்டாசு வெடித்த விபத்தில் இருவர் காயம்

பட்டாசு வெடித்த விபத்தில் இருவர் காயம்

பட்டாசு வெடித்த விபத்தில் இருவர் காயம்


ADDED : ஜூன் 06, 2026 06:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 06:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே துக்க நிகழ்ச்சியின் போது நடந்த வெடி விபத்தில் ஒரு பெண் உள்ளிட்ட இருவர் பலத்த காயமடைந்தனர்.

திருக்கோவிலுார் அடுத்த செட்டிதாங்கல் கிராமத்தில் சாலை விபத்து ஒன்றில் அய்யனார் மகன் விக்னேஷ் குமார், 19; என்பவர் கடந்த, 4ம் தேதி நடந்த விபத்து ஒன்றில் உயிரிழந்தார்.

இவரது துக்க நிகழ்ச்சிக்காக நேற்று காலை பட்டாசு வெடிக்கப்பட்டது. அருகில் நிறுத்தப்பட்டிருந்த டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., மொபட்டில், சாக்கு பையில் இருந்த பட்டாசு மீது நெருப்புப்பட்டு வெடிக்க தொடங்கியது. இதில் இருசக்கர வாகனம் வெடித்து பெரும் விபத்தானது.

இதில் துக்கம் விசாரிக்க சென்ற செட்டித்தாங்கல் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் ஏழுமலை, 42; பலத்த தீக்காயம் அடைந்தார். அதேபோல, கீழத்தாழனுாரை சேர்ந்த சங்கர் மனைவி செல்வி, 36; தீக்காயங்களுடனும் மீட்கப்பட்டா். இருவரும், திருக்கோவிலுார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருக்கோவிலுார் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us