/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மோட்டார், பைப் திருடிய இரண்டு பேர் கைது
/
மோட்டார், பைப் திருடிய இரண்டு பேர் கைது
ADDED : செப் 15, 2024 06:43 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே விளைநிலத்தில் பைப், மின்மோட்டார் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி ராஜாநகரை சேர்ந்தவர் ராமு மகன் பிரபு,40. இவருக்கு சொந்தமான 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட விளைநிலம் க.மாமனந்தல் பகுதியில் உள்ளது.
நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில் விளைநில கிணற்றில் உள்ள பைப்பினை மர்மநபர்கள் அறுத்து கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பிரபு சென்று பார்த்தார்.
அப்போது, மர்ம நபர்கள் இருவர் தப்பி ஓட முயன்றனர். அவர்களை பிரபு மடக்கி விசாரித்தார். கள்ளக்குறிச்சி வ.உ.சி., நகரை சேர்ந்த வேலு மகன் நரேஷ்,24; சின்னசாமி மகன் அஜித்,30; என்பதும், அவர்களிடம் 3 அடி நீளம் பைப், நீர்மூழ்கி மோட்டார் இருந்தது தெரிய வந்தது.
அவர்களை போலீசில் ஒப்படைத்து புகார் அளித்தார். அதன்பேரில், நரேஷ், சின்னசாமி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, பொருட்கள், ஸ்கூட்டியை பறிமுதல் செய்தனர்.