/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
/
பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED : ஜூலை 07, 2024 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
தியாகதுருகம் அடுத்த சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது. மூலவர் பெரியநாயகி அம்மன், கருவறையில் உள்ள பிரம்மாண்ட புற்று, கொடிமரம், வசந்தமண்டபம், உற்சவர் அம்மன் மற்றும் ஊஞ்சல் ஆகியவற்றுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இரவு வசந்த மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் அம்மனை எழுந்தருள செய்து, பூசாரிகள் பக்தி பாடல்களை பாடி தாலாட்டி சிறப்பு ஆராதனை செய்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.