/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தடையின்றி குடிநீர் ஆலோசனைக் கூட்டம்
/
தடையின்றி குடிநீர் ஆலோசனைக் கூட்டம்
ADDED : ஏப் 28, 2024 04:51 AM

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் பி.டி.ஓ., அலுவலகத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். பி.டி.ஓ., ரவிசங்கர் முன்னிலை வகித்தார். பருவமழை பொய்த்ததால் சின்னசேலம் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது.
இதையொட்டி, பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக உள்ள கிராமங்களில் டேங்கர் லாரிகளைக் கொண்டு பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்வது. தேவைப்படும் கிராமங்களில் ஒன்றிய பொதுநிதியில் இருந்து புதிய போர்வெல் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில், ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

