நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்; சங்கராபுரம், வள்ளலார் மன்றத்தில் மாசி மாத பூச விழா நடந்தது.
பொருளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். அரிமா மாவட்ட தலைவர் வேலு, முன்னாள் செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். ராதாகிருஷ்ணன் வரவேற்றார். அகவல் படித்து உலக அமைதிக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது.
ரோட்டரி முன்னாள் தலைவர் முர்த்தி, சைவ சித்தாந்த அமைப்பாளர் இளையாப்பிள்ளை, தலைமை ஆசிரியர் வெங்கடேசன், மருந்தாளுனர் பழனியாப்பிள்ளை, சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஜோதி தரிசனத்திற்கு பின் பிரசாதம் வழங்கப்பட்டது. சித்ரா சேகர் நன்றி கூறினார்.