/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வன பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
/
வன பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : ஜூலை 14, 2024 11:33 PM
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த மேல்சிறுவளுரில் 23 அடி உயர வன பத்ரகாளி அம்மனுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது.
விழா, கடந்த 12ம் தேதி காலை 9:00 மணியளவில் மகாகணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 9:00 மணியளவில் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.
கும்பாபிேஷக தினமான நேற்று, காலை 8:00 மணியளவில் மூன்றாம் கால யாகசாலை பூஜையைத் தொடர்ந்து, புதிய சிலைகளுக்கு பிரதிஷ்டை செய்து நவாவரண பூஜை பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.
மதியம் 12:00 மணியளவில் கடம் புறப்பட்டாகி 23 அடி உயர மகா ஸ்ரீ வன பத்ரகாளி அம்மன் சிலைக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள மகா கணபதி. ஈஸ்வரன், வராகி அம்மன் , பிரத்யங்கிரா தேவி, நாகாத்தம்மன், காலபைரவர், கருமாரியம்மன் உள்ளிட்ட சிலைகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஷில்பா தேவி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.