/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் வரலட்சுமி நோன்பு
/
கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் வரலட்சுமி நோன்பு
ADDED : ஆக 17, 2024 03:32 AM

சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வரலட்சுமி நோன்பு நடந்தது.
இதையொட்டி, காலை 7 மணி அளவில் விக்னேஸ்வர பூஜையும் சுமங்கலி பூஜை நடந்தது.
இதில் ஆர்ய வைசிய மகிளா சங்க நிர்வாகிகள், வாசவி வனிதா கிளப், ஆர்ய வைசிய சமூக சுமங்கலிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆறு கிலோ மஞ்சத்தூளில் கௌரி தேவியை ஆகாவனம் செய்து பூஜைகள் செய்தனர்.
முன்னதாக மூன்று கலசங்கள் வைத்து பரத் சர்மா மற்றும் ஹரி, முரளி ஆகியோர் வேதங்கள் முழங்க தீபாராதனை செய்தனர்.
தொடர்ந்து பத்தாம் மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
பூஜையில் ஆர்ய சுமங்கலிகள் பூஜையில் நோம்பு கயிரு எடுத்து ஒருவருக்கொருவர் கட்டிக் கொண்டனர்.
இதில் திரளான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு பங்கேற்றனர்.

