ADDED : மார் 07, 2025 11:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகில் வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடந்த சுவாமி விதி உலாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 5ம் நாளான நேற்று காலை 5:00 மணிக்கு மூலமூர்த்திகளுக்கு அபிஷேகம், அலங்காரம், உற்சவர் சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரர்க்கு சிறப்பு அலங்காரத்தில்
தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, அதிகார நந்தி வாகனத்தில் காலை 9:00 மணிக்கு சுவாமி வீதி உலா நடைபெற்றது. மாலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜைகளும், இரவு 8:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனத்தில் வீதியுலா நடந்தது. இந்து சமய அறநிலைத்துறை சார்பில் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.