/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாகன சோதனை: 30 பேர் மீது வழக்கு
/
வாகன சோதனை: 30 பேர் மீது வழக்கு
ADDED : ஜூன் 14, 2024 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில், போக்குவரத்து விதி மீறிய 30 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.
சங்கராபுரம் கடைவீதி, கள்ளக்குறிச்சி மெயின்ரோடு ஆகிய இடங்களில் சங்கராபுரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், போக்குவரத்து விதிமுறைகளை மீறி குடிபோதையில், லைசன்ஸ் இல்லாமல், உரிய ஆவணங்கள் இன்றியும், ெஹல்மெட் அணியாமலும், காரில் சீட் பெல்ட் அணியாமலும் வாகனம் ஓட்டிய 30 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.