/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்; காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?
/
பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்; காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?
பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்; காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?
பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்; காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?
ADDED : செப் 05, 2024 09:48 PM
சங்கராபுரம் : சங்கராபுரம் பஸ் நிலையத்தில் போக்குவரத்திற்கு இடையூராக நிறுத்தப்படும் வாகனங்களால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சங்கராபுரம் சுற்றி உள்ள 50 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சங்கராபுரம் பஸ் நிலையத்தில் இருந்து தினசரி 50 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் செல்கின்றன.சங்கராபுரம் பஸ் நிலையத்திற்குள் அதிக பஸ்கள் நின்று செல்ல போதிய இட வசதி கிடையாது. குறைந்த அளவே இட வசதி உள்ளது. இதில் பஸ் நிலைய வளாகத்தில் இரு புறமும் பேரூராட்சி மற்றும் தனியார் கடைகள் வாடகைக்கு விட்டுள்ளனர். கடைகாரர்கள் கடையின் முன் உள்ள இடத்தை ஆக்கிரமித்துள்ளனர்.நடைபாதைக்கு விடப்பட்டுள்ள இடத்தில் பூகடை, மணிலா வியாபாரம் உள்ளிட்ட கடைகள் வைக்கப்பட்டுள்ளது.
பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கடைகளுக்கு பொருட்கள் வாங்க வருவோர் மற்றும் கள்ளக்குறிச்சி,திருவண்ணாமலை போன்ற வெளியூர் செல்லும் வெளியூர் நபர்கள் தங்கள் இரு சக்கர வாகனத்தை பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கடைகளுக்கு முன்பு தாறுமாறக நிறுத்திவிட்டு செல்கின்றனர்.
மேலும் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளுக்கு சரக்கு ஏற்றி வரும் லாரிகள் தினசரி பஸ் நிலையத்திற்குள் போக்குவரத்திற்கு இடையூராக நிறுத்தி சரக்குகளை இறக்கும் நிலை உள்ளது. பஸ் நிலையத்திற்குள் ஆட்டோக்கள் வரக்கூடாது என்று எச்சரிக்கை பலகை வைத்தும் அனைத்து ஆட்டோக்களும் பஸ் நிலையத்திற்குள் வந்து, தாறுமாறாக நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர்.
இதனால் பஸ் நிலையத்தில் பஸ் டிரைவர்கள் நேரத்திற்கு வண்டியை எடுக்க முடியாத சூழல் உள்ளது. மேலும் பயணிகளும் அவதிக்குள்ளாகின்றனர்.
சங்கராபுரம் பஸ் நிலையத்தில் போக்குவரத்திற்கு இடையூராக நிறுத்தப்படும் வாகன உரிமையாளர்கள் மற்றும் பஸ் நிலையத்திற்குள் போக்குவரத்திற்கு இடையூராக வந்து செல்லும் ஆட்டோ, வேன், கார், சரக்கு லாரி போன்றவை மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் பஸ் நிலையத்தில் பஸ்கள் குறித்த நேரத்திற்கு கிளம்ப முடியும். பயணிகள் சங்கடமின்றி பயணிக்க முடியும்.