/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
/
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
ADDED : செப் 08, 2024 06:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: சிறுமங்கலம் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இது தொடர்பாக அக்கிராம மக்கள் கலெக்டர் பிரசாந்திடம் அளித்த மனு:
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுமங்கலம் ஊராட்சியில் அரசு டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அங்கு டாஸ்மாக் கடைகள் திறந்தால் கிராம பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, சிறுமங்கலம் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைப்பதை தடை செய்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு மனுவில் உள்ளது.