/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எந்த வேட்பாளருக்கு ஓட்டு மொபைல் மூலம் சர்வே
/
எந்த வேட்பாளருக்கு ஓட்டு மொபைல் மூலம் சர்வே
ADDED : ஏப் 07, 2024 05:54 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்கு ஆதரவு அதிகம் என்பதை தெரிந்து கொள்ள மொபைல் போன் மூலம் சர்வே எடுக்கும் பணி நடக்கிறது.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியைச் சேர்ந்த சில வாக்காளர்களின் மொபைல் எண்ணுக்கு, பஞ்சாப் மாநில தொடர்பு எண்ணில் (+911865031847) இருந்து அழைப்பு வருகிறது. அழைப்பினை எடுத்தால் கள்ளக்குறிச்சியில் மக்களவை தேர்தலில் உங்கள் ஓட்டுகளை எந்த வேட்பாளருக்கு செலுத்துவீங்கள்.
அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு என்றால் எண் 5ஐ அழுத்தவும், பா.ம.க., வேட்பாளர் தேவதாஸ் என்றால் எண் 6ஐ அழுத்தவும், தி.மு.க., வேட்பாளர் மலையரசன் என்றால் எண் 7ஐ எழுத்தவும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீசன் என்றால் எண் 8ஐ அழுத்தவும், மற்றவர்களுக்கு எண் 9ஐ அழுத்தவும் என குரல் ஒலிக்கிறது.
எந்த எண்ணும் அழுத்தாத பட்சத்தில் மீண்டும் இதே வாசகம் ஒலித்து, இணைப்பு துண்டிக்கப்படுகிறது. தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு அதிகம், யார் வெற்றி பெறுவார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காக மொபைல் போன் மூலம் சர்வே பணி நடந்துள்ளது. ஆனால், இந்த அழைப்பு யாரிடம் இருந்து வருகிறது, என்ற விபரம் யாருக்கும் தெரியவில்லை.

